நடுநிசியில் விழித்த நேரம்
நிசப்தத்தின் உச்சத்தில்
சிந்தனைகள் உயரே பறக்க
சிந்திக்க தொடங்குகிறேன்
பால் வேண்டி மார்தேடும்
சிறுகுழந்தையைப் போல
வார்த்தைகளைத் தேடி
சிந்தனைக் கவிஞனாய்
இருளின் ஓசையில் நடக்க
காற்றாடியின் ஓசையும்
வெளி வந்த நேரம் காற்றின் தழுவலும்
தூரத்து நாய்களின் ஓலமும்
சில் வண்டின் ரீங்காரமும்
தேரையின் சப்தமும்
கவிதைப் புரிய துணைப்புரியுமா
என்ற ஐயத்தில் வார்த்தைகளை
அடுக்கத் தொடங்க
வீசும் காற்றின் ஓசைக் குறைய
சிறு சிறு துளியாய்
வீழும் மழைத் துளியின் சப்தத்தில்
என் மனம் மறந்து போய்
சாலையோர மனிதனின்
செயல்களை சிந்தையில் நிறுத்த
அவனுக்கு ஏன் இந்த சமூகத்தோடு
கோபம் என்ற ஆய்வில்
தெளிய முடியாது தவிக்கத் தொடங்க
என் கண்களும் பொய்யாய் உறங்க
தொடக்கம் குறிக்க
தொடரும் அந்த அலறலின் ஓசை
அடி வயிற்றைக் கலக்க
அவனின் தோற்றம்
சமூகத்தில் ஏற்பட்ட
ஏமாற்றத்தின் வெளிப்பாட்டையும்
தோல்வியின் உச்சத்தையும்
வறுமையின் போராட்டத்தையும்
வெளிக்கொண்டு வர
அவனின் வார்த்தைகள்
அவனறிந்த உலகத்தோடு
அவனுக்குரிய மொழியில்
இந்த மானங்கெட்ட சமூகத்தை
சபித்துக் கொண்டிருந்ததை
என் மனம் மனனம்
செய்யத் தொடங்கிய கணம்
என்னுள் உறக்கம் உறக்கமாய்
ஆட்கொண்டது.......
நிசப்தத்தின் உச்சத்தில்
சிந்தனைகள் உயரே பறக்க
சிந்திக்க தொடங்குகிறேன்
பால் வேண்டி மார்தேடும்
சிறுகுழந்தையைப் போல
வார்த்தைகளைத் தேடி
சிந்தனைக் கவிஞனாய்
இருளின் ஓசையில் நடக்க
காற்றாடியின் ஓசையும்
வெளி வந்த நேரம் காற்றின் தழுவலும்
தூரத்து நாய்களின் ஓலமும்
சில் வண்டின் ரீங்காரமும்
தேரையின் சப்தமும்
கவிதைப் புரிய துணைப்புரியுமா
என்ற ஐயத்தில் வார்த்தைகளை
அடுக்கத் தொடங்க
வீசும் காற்றின் ஓசைக் குறைய
சிறு சிறு துளியாய்
வீழும் மழைத் துளியின் சப்தத்தில்
என் மனம் மறந்து போய்
சாலையோர மனிதனின்
செயல்களை சிந்தையில் நிறுத்த
அவனுக்கு ஏன் இந்த சமூகத்தோடு
கோபம் என்ற ஆய்வில்
தெளிய முடியாது தவிக்கத் தொடங்க
என் கண்களும் பொய்யாய் உறங்க
தொடக்கம் குறிக்க
தொடரும் அந்த அலறலின் ஓசை
அடி வயிற்றைக் கலக்க
அவனின் தோற்றம்
சமூகத்தில் ஏற்பட்ட
ஏமாற்றத்தின் வெளிப்பாட்டையும்
தோல்வியின் உச்சத்தையும்
வறுமையின் போராட்டத்தையும்
வெளிக்கொண்டு வர
அவனின் வார்த்தைகள்
அவனறிந்த உலகத்தோடு
அவனுக்குரிய மொழியில்
இந்த மானங்கெட்ட சமூகத்தை
சபித்துக் கொண்டிருந்ததை
என் மனம் மனனம்
செய்யத் தொடங்கிய கணம்
என்னுள் உறக்கம் உறக்கமாய்
ஆட்கொண்டது.......
No comments:
Post a Comment