இறக்கவில்லை
பிணமாய்
மதுக்கடை வாசலில்
மனிதன்
.
.
.
.
தன்னையும்
தன் சைக்கிளையும்
சுமந்து செல்கிறார்
தபால்காரர்
.
.
.
.
அலையே
உனைப் பார்க்க
நாங்கள் இருக்கப்
போவதில்லை நீ
கரை தாண்டினால்
.
.
.
.
நவீன வலையில்
மனித சமூகம்
சிலந்தி யாரோ
.
.
.
.
ஆழ்ந்த நித்திரையில்
நீளும் கனவில்
அன்பும் எதிர்ப்பும்
இறந்தவர் எழுவதும்
இருப்பவர் இறப்பதுமாய்
.
.
.
.
நீர் வற்றிய
குளத்தில்
நீந்த மறக்கிறது
மீனின் குஞ்சுகள்
.
.
.
.
இத்தனை கால்களிருந்தும்
இந்த சாலையை வேகமாக
கடக்க முடியாமல் நசுங்கி
உயிர் பிரிந்த கதையை
எப்படி உன்னிடம் சொல்ல..
.
.
.
.
எனக்கும்
எனக்குள்ளும்
சண்டையில்லை
இருந்தும் பேச
மறுக்கிறோம்
ஆம் மறக்கிறோம்
பேச...
.
.
.
.
அசைந்தாடும் அவள்
விழிகளில் அலை போல்
ஆயிரம் எண்ணங்கள்
என்ன நினைப்பாளோ
எனும் போரட்டத்தில்
அவளெதிரே நானும்..
.
.
.
.
அவள் அழகாக இருக்கிறாள்
என்னை பார்க்கவில்லை
இசை அவளது காதினுள்
சில நேர புன்முறுவல்கள்
ரசிப்பதில் தெரிகிறது
அறிமுகமில்லையே எனக்கு
நான் இயற்கை ரசிப்பது
போலிருக்க என் மனம் ??
.
.
.
.
என் முன் உணவு
பசியைப் பற்றி
யோசிக்கிறேன்
சுயநலமாய்..
.
.
.
.
பிணக்குவியல்களின் நடுவில்
கண்ணில் நீர் வற்றிய குழந்தை
மரணத்தை வழிநோக்கி...
.
.
.
.
கிரகணம் பீடித்த நிலவு போல்
இவ்வுலகும் மெல்ல இருளில்
யார் இங்கே கடைசியாய்..
.
.
.
.
அந்த காக்கை ஏன்
கரைகிறது
வீட்டில்
உணவில்லை
என்பது தெரியுமா
அதற்கு...
,
.
.
.
இருளின் வாசத்தில்
பாலை நிலத்தில்
நடக்க தொடங்கினேன்
நானும் எனது
நானும்...
.
.
.
.
கனவில்
குடித்த
காபியில்
தொலைந்தது
எனது
தூக்கம்..
.
.
.
.
.
நாட்பட்ட ரணமும்
நாட்பட்ட காதலும்
மரத்து போகுமே
நாட்களும் இறந்துக்
கொண்டிருக்க...
.
.
.
.
ரகசியம்
என்பது
அதனுள்
இருக்கும்
ரகசியம் தான்..
,
.
.
.
நீ நீயாக இல்லை என்பதற்கு உன்
கல்லறை மட்டுமே சாட்சியம் சொல்லும்...
.
.
.
.
இறந்தவரை சுற்றி
அழுகுரல் சப்தங்கள்
இடை இடையே
வித விதமான
கைபேசி் அழைப்பு
ஒலிகளுடன்...
.
.
.
.
பிணவறையில்
உறங்கா
பிணங்களின்
ஆதங்கம்
சகிக்க முடியாத
துர்நாற்றம்..
.
.
.
.
உன்னிடம்
மட்டுமே
சொல்லுகிறேன்
ரகசியம்..
.
.
.
.
.
எழுத நினைக்கும்
வார்த்தைகள்
என் மனதில் இல்லை
அதனால்
எழுதவில்லை
#ஞாபகமும் மறதியும்
.
.
.
.
.
வெற்றிடத்தில்
இருந்தால்
இறந்துவிடுவேன்
.
.
.
.
என் வினை
தன் வினை
பிறர் வினை
எல்லாம்
செய் வினை
எனக் கொள்க
.
.
.
.
தெளிவில்லாமை
துன்பத்தில்
சிரிக்க மட்டுமே
.
.
.
.
வயிற்றில்
இடமில்லை
இருந்தும்
பசித்திருக்கிறான்
மிருகமாய்
.
.
.
.
காதல்
துன்பம்
ஏமாற்றம்
எதிர்பார்ப்பு
இழப்பு
இவையே
நவீன கவிதை
.
.
.
.
விண்மீன்கள்
உறங்குவதில்லை .
.
.
.
.
உறக்கம் வரவில்லை
உறங்க முயற்சிக்கிறேன்
காரணம்
இரவாகி விட்டது...
.
.
.
.
எல்லா மீன்களும்
நீந்துகிறது
வலை காத்துக்
கொண்டிருக்கிறது...
.
.
.
.
கருமேகத்தில்
நீர்த்து விடும்
முழு நிலவும்..
.
.
.
.
காகிதக் கப்பலும்
சுமந்து செல்லும்
குழந்தைகளின்
கனவுகள்....
.
.
.
.
எனக்கு வேர்க்க வில்லை
இருந்தும் நான் குளிரும்
பிணவறையில்...
.
.
.
.
எனக்கும் ஒரு காதலி இருக்கிறாள்
நேரில் அவளைப் பார்த்ததில்லை
இருந்தும் நான் காதலிக்கிறேன்
காரணம் அவளும் என்னை
காதலிப்பதால்...
.
.
.
.
அரிது
அறிது
அறிவு..
.
.
.
.
கருகும்
நுனியில்
விளக்கின்
ஒளி..
.
.
.
.
சத்தம் போடாதே
என் குழந்தை
உணர்ந்து விடுவாள்
என் கனவில்...
.
.
.
.
மிரட்டுகிறேன்
அவன் சிரிக்கிறான்
பயமில்லாத
குழந்தையாக ...
.
.
.
.
மழையில் நடந்ததால்
நனைந்து விட்டேன்
குடையில்லை என்னிடம்...
.
.
.
.
உறங்காமல்
யோசிக்கிறேன்
உறங்குவது
எப்படி என்று...
.
.
.
.
உள் கிரகிக்க
இயலவில்லை
வீதியெங்கும்
மழை வெள்ளம் ...
.
.
.
.
செல்வம் அழித்து
செல்வம் பெருக்க
சிறைப் பிடித்தேன்
வாஸ்து மீனை...
.
.
.
.
.தொடரும்,
No comments:
Post a Comment