Thursday 10 July 2014

கவிதை

தேடி வா என் காதலியே......

தேடி வா காதலியே உனக்காக 
நான் மட்டும் காத்திருக்கிறேன்
உன் நிறமறிய விரும்பவில்லை
நீ வாழ்ந்த வாழ்க்கை 
அறிய விரும்பவில்லை
பேசும் மொழி தெரியவில்லை
நீ இருக்குமிடமும் புலப்படவில்லை
உன்னை கைப்பற்ற என்னிடம் 
தூண்டிலும் இல்லை 
உன்னை மயக்க என்னிடம்
வாசகமும் இல்லை
உனக்கு பிடித்த விசயங்கள்
தெரிந்தவனில்லை
தேடி வா காதலியே உனக்காக
நான் மட்டும் காத்திருக்கிறேன்
நித்தம் நினைக்கிறேன் உனை
என்னருகில் இருப்பதாய்
உன் ஸ்பரிசம் உணர்வதாய்
உன் தனிமையை அறுப்பதாய்
உன் உள்ளம் என்றும் குளிர்விப்பதாய்
சிறு சிறு ஊடல்கள் கொள்வதாய்
இரவின் மடியில் கூடல் கொள்வதாய்
உனை நினைக்காத நாளில்லை
உன் சமிக்கை வேண்டி தேடாத
தேடலில்லை எல்லாம் வீண்
தானோ வெயில் தொடும் பனியைப்
போல என் நினைவுகள் நித்தமும்
கரைந்து கொண்டிருக்கின்றன
கரைவதை தடுக்க முடியவில்லை
இயற்கை எதிர்க்க மனமுமில்லை
இருந்தும் என் சினேகம் அணுவளவு
மாறிடினும் அது உனக்கு மட்டும் தான்
தேடி வா காதலியே உனக்காக
நான் மட்டும் காத்திருப்பேன்
கல்லறை புகினும்,,,,,,

- சாய் -



காலை விழித்து விட்டேன்....

காலை விழித்துவிட்டேன்
இனியொரு நாள்
எனக்காகவா
என் தாயிற்காகவா
என் தோழர்களுக்காகவா
என் தோழிக்காகவா
என் வாடிக்கையாளருக்காகவா
என் பயணத்திற்காகவா
என் அரட்டைகளுக்காகவா
புத்தக வாசிபிற்காகவா
சிலரை ஆறுதல் படுத்தவா
சில தர்க்கங்களுக்காகவா
சமாதானத்திற்கா
மன்னிக்க என் காதலியும்
நினைவுகளும்
யாரிடம் இந்த மன்னிப்பு
கோர யாருக்காவது கடமை
பட்டிருக்கும் தொனியில்
யாருமில்லை இருந்தும்
கேட்டுவிட்டேன் இரவும்
காலம் கடத்தாமல் இமைகளும்
என் பேச்சு கேட்காமல்
மனதோ அலையைப் போல்
நினைவுகளை மீட்க
நாளும் முடிந்தது எதுவும்
முன்னேற்பாடில்லாமல்
இனியொரு நாள் விழிப்புண்டா
என்ற கேள்வியோடு


- சாய் -


எதிர்பார்ப்புகள்..

எதிர்பார்க்கிறேனா 
என்ன இருக்கு என்னிடம்
எதுவுமில்லை, இல்லையா ?
இருக்கு என்னிடமும் 
அப்போ என்ன இருக்கு
என் மனதில்
நேற்றைய நிகழ்வுகளின்
ஓட்டம் தவறு இருக்கிறதா
தவறில்லை என தேற்றி கொள்வது
மனதளவில் மட்டுமே, ஆம்
தவறு அகல மறுக்கிறதே யாரும்
அறியா என் நினைவுகளில் மட்டும்
இன்றோ ஆரம்பித்து விட்டது
தெரியவில்லை தவறு வருமா?
வரவேக் கூடாது நிஜத்தில்
வாழ வேண்டும் என்ற ஆசை
இது பேராசை அல்ல
பிறந்த காரணம் வேண்டுமே,
மூடுபனி போல் முட்டுகட்டைகள்
முன்னிருப்பதால் வழிகளும் தெரிய
மறுக்கிறதே வேகம் வேண்டுவதில்லை
ஆமையாகவும் அல்ல நம்பிக்கை
நாடுகிறேன் நல்லதே நடக்க
இருந்தும், மனதே தேற்றி
கொள்ளவும் பக்குவமும் வேண்டும்
நடப்பது நல்லது இல்லையென்றால்
நடக்கட்டும் எதுவாக இருந்தாலும்
பகிர்ந்து விட நினைக்கிறேன்
எதிர்பார்ப்புகள் வேண்டாம் என
காரணமும் இருக்கிறது
என் எதிர்பார்ப்பிற்கான காரணமும்
அதுவே தான்......

- சாய் -


தேடிபோகாதே.. 


தேடிப் போய்
காதலிப்பதை விட
உன்னை தேடி
வந்தவளை காதலிக்க
கற்றுக்கொள் உனக்கான
அன்பு அங்கு எப்போதும்
பாதுகாப்பாக வைக்கப்பட்டு
பக்குமாக பகிரப்படும்,,,,

- sai -


விளம்பர பலகைகள்..

பல்வேறு மனிதர்களுக்கு
மத்தியில் புகழின்
உச்சிக்கு செல்பவர்கள்
விளம்பரபலகைகளாக
ஆக்கப்படுகிறார்கள்

- sai -


இன்றைய நட்புகள்..

அன்பால் வளர்க்கப்பட்ட
நட்பும் காற்றடைத்த
பலூன் போலவே
பணமென்ற வெயிலடித்தால்
தளர்ந்துவிடும்

-sai-

மன்னித்து விடு..

மன்னித்து விடு என்ற
வார்த்தையில்
மறுமுறை செய் என்ற
சூட்சமம் இருப்பதை
மறக்காதே ஆகவே
மன்னிக்காதே
-சாய்-

என் மரணம்..

என் மரணம்
என் தனிமைக்கு 
விடை சொல்லிவிட்டது
தனிமையின் விரக்தியில்
துவண்ட போது எனைக்
கைவிட்ட என் உயிர் இன்று 
என் கடைசி கட்டத்திற்காக
ஓடி கொண்டிருக்கிறது
என் கருவறையில் நாம் 
என இருந்தபோதும் பத்து 
திங்கள் சுமந்த போதும்
எதிர்பார்க்க வில்லை நீ
என்னை தனிமையில்
விடுவாய் என்று அன்றே
எனக்கு கற்று கொடுத்து
விட்டாய் நாம் என இருந்த
நான் உனை பிரசவித்த
போது நீயும், நானும்
என்றாகி விட்டோம்
நீ தவழ்ந்ததும் வளர்ந்ததும்
கண்ட மகிழ்ந்த போது
நினைக்கவில்லை
தனிமையின் தவிப்பை -
வாழ்நாள் முழுதும்
கடல் அலைப் போல்
அன்பை பொழிவாய் என்று
நினைத்திருக்க நீ உன் வழி
தேடி எனை மறந்த போதே
சுக்கு நூறாக்கி விட்டாய்
என் இதயத்தை அன்பு மகனே
உன் மீது எனக்கு வருத்தமில்லை
இன்று நான் அழவில்லை
உனக்கு உயிர் கொடுத்த
உயிர் நிரந்தரமாக உறங்கி
கொண்டிருக்கிறது உன்
அன்பு கிடைக்காமல்

- சாய் -


நான் சிறந்தவனில்லை..

நான் சிறந்தவனில்லை
ஆனால் சரியாக இருப்பேன்
எப்போது சரியாக இருக்கிறேனோ
அப்போது சிறந்தவனாக இருப்பேன்....

-சாய்-


தேடல்...


தேடல்
என்ன தேடுகிறோம்
என்ற தேடல் இல்லாமல்
ஒரு தேடலா
திக்கற்ற உலகமும்
மதிகெட்ட மனிதமும்
மாயைகளும்
நாசங்களும்
போட்டிகளும்
நீதிகளின் பெயரில்
அநீதிகளும்
சமத்துவத்தின் நிழலில்
இன அழிப்புகளும்
பாலின ஏற்றத்தாழ்வுகளும்
மதத்தின் பிடியில்
மதமேறிய களிறு கூட்டங்களும்
நிறைந்து உறைத்து நிற்கும்
வையத்தில் தேடலா ?
என்ன தேடல்
வாழ்வதற்கான தேடலா ?
ஆசைக்கான தேடலா ?
அமைதிக்கான தேடலா ?
முடிவிருக்குமா ?
தேடியடைந்த நிமிடம்
நிற்குமா எந்தன் தேடலின்
வேகம், எதில் கிடைக்கும்
தேடலின் முற்று
வாழ்ந்தவர் அனுபவத்திலா
வாழும் முறையிலா
புத்தகமா , ஆன்மீகமா
நாத்தீகமா, அன்பின் வழியிலா
தேடுகிறேன்,
நானும் நீங்களும் அவரவர்
வழிதனில் முடிவில்லா
வழிதனில் உயிர் உடலை
விட்டு முற்றுப்பெறும்
வரை தேடலும்
தேடலுடன் என் மனதும்,,,,,

- சாய் -

தொடர்பின் வளர்ச்சி..

தொடர்பின் வளர்ச்சி
முகம் தெரியா நட்புகள்
இல்லாத ஏக்கப் பகிர்வுகள்
தாலியில்லாத் திருமணங்கள்
உடல்தொடா எல்லை மீறல்கள்
யோக்கிய பகிர்வுகள்
உள்டப்பியில் ஆபாசங்கள்
ஊருக்கு உபதேசங்கள்
பெண் ஆதரவு சீமான்கள்
வீட்டில் அடிமைாய் மனைவிகள்
இன்னும் இன்னுமாய் நீளும்
இந்த புத்தகம் இனறைய காலத்தின்
அவலச் சுவடுகளாய்...

-சாய்-

உன் நிமித்தம்...

நித்தம் நித்தமாய்
உன் நிமித்தம்
என் சித்தம்
கலங்கிடினும்
புத்தம் புத்தமாய்
நினைவு யுத்தம்
செய்கிறாய்
என் கனவினில்
ஏனடீ இது என்
நிமித்தமோ....

- சாய் -