Wednesday 1 November 2017

நூல் விமர்சனம் : பாகீரதியின் மதியம்

நூல் விமர்சனம் : பாகீரதியின் மதியம்
ஆசிரியர் : பா. வெங்கடேசன்
பதிப்பகம் : காலச்சுவடு

கனவுகளில் புதைந்து அதன் வழி நிஜம் தேடி அதனுள் ஒப்புவிக்கும் புனைவை நேர்த்தியாக அழகான நடையில் வரலாற்றின் நிகழ்வுகளை புனைவுகளோடு பொருத்தி மென்மையாக விரிவடையும் தளத்தினுள் சாதீயத்தின் தாக்கமும், சூழியல் சீர்கேட்டின் விளைவுகளையும், இசத்தின் கோட்பாட்டில் சிதைந்துப் போகத்துடிக்கும் ஆன்மாக்களையும், வன மக்களையும்  அதனூடாய் நாகரீக மனிதனின் எதிர்கால விளைவுத்தேடல்களையும் உட்புகுத்தி நளினமாய், தடங்களை வலிய தருவிக்காமல் கதையை கதை மாந்தர்களினூடே புனைந்து அதன் நினைவுகளை வடிக்கும் மனதிற்கு நிழலாக்கி அதன் தன்மையை நிஜத்தில் ஊடுறவச் செய்யும் என்ணத்தை கொடுக்கவல்ல தமிழின் மிகச்சிறந்த புதினமாக வடிவெடுத்து தன்னை புனைவுகளின் முடிவிற்குட்படுத்தாமல் வினையைத் தேடி மனவோட்டத்தால் அலையும் வாசகர்களை உருவாக்கும் பெருமைக்குச் சொந்தமாய் ஆசிரியரை உணர, வழித்தேடல்கள் அவரவர் எண்ணத்திற்குட்பட்டு நேர்மறையாகவோ, எதிர்மறையாகவோ இருக்கும் பட்சத்தில் அக புற மனதில் எண்ணப் போராட்டத்திற்கிடையில் இரு வேறான கருத்தியல் விளைவுகளைக் கொடுக்கும் பாணியில் முன் சமூக வழிகளை நாகரீகக் கோட்பாட்டில் உட்படுத்தாது புலரும் எண்ணத்தை ஆணியப் பார்வையில் தவிர்த்து பெண்மையின் சுயத்தேடலில் பிழையில்லாத அன்பின் வழி இன்றைய சமூகத்தின் புறம் நோக்க ஏற்றுக்கொள்ளவியலாத தூற்றும் தன்மைக் கொண்டும் அக மனதில் ஏற்கும் பாவமுடையதாயான சாத்தியமுடைய பெண்மையை நம் கண்ணிற்கு புலப்படுத்தி முற்காலத்தின் வாழ்வியல் தேடல்களில் நன்மையெனும் சுவாசக் குரல்வளையையும் அறுக்கும் நாகரீகத் தேடலில் ஒடுங்கிப் போன மக்களிலிருந்தும், ஒடுக்கத் துணிந்த மக்களிலிருந்தும், கதாப்பாத்திரங்களைப் பெயர்த்தெடுத்து இன்றைய சமூகத்தின் பிரச்சினைகளுக்கு மூலமாய் விளங்கும் காரணிகளை நம்முன் குறியீடுகளில் காட்சிப்படுத்தி காலம் அழிந்தும் அதன் காட்சிகள் அழிந்தும் மறந்தும் போன நிலையில் நம் சமூகம் இயற்கையின் நியதியனூடே பாடமாக்க மறந்து போன பாடத்தை கொடுத்து சமூகத்தின் அவல வெளிப்பாடுகளை தகர்க்க முடியுமா எனத் தோன்றும் நேரம் உருவாகிய தேடலில் கடலலைப் போல சளைக்காத மழைச்சாரலின் மென்மையுடனும் வன்முறைத் தவிர்க்க முயன்று மனிதனின் இரத்தக்கறைப்படியாது காரணிகளையும், காரணத்தையும் தக்க விதத்தில் தகுந்த இடத்தில் புகுத்தி கனவுகளின் போர்களத்தில் காதலையும் காதலினூடே பெண்மையின் தவிப்புகளை அவளின் அனுமதியில்லாமல் வாசிக்கும் நபர்களை ஸ்பர்சிக்க செய்யும் வித்தையூடாக நிச்சயம் வாசிப்பவர்களின் கடந்தகால அனுபவங்களை கிளர்ந்தியதனூடாய் பொருத்தி மகிழவோ, வருத்தப் படவோ, உணர்வுப்பூர்வமாய் சிந்திக்கவோ வைக்கிறத் தொனியைத் தாங்கி தொடர்பு விடாமல் நம்மை புதினத்தின் எழுத்துக்களைத் துரத்திப்பிடித்து எண்ணத்தை உட்கிரகித்து முடிவுகளைக் காண முனையும் பொழுது முடிவுகள் முடியாப் பயணத்தில் முடிவை வாசிப்பவரின் முடிவாக்கி முள்ளின் தன்மையைப் போல் விறைத்துக் குத்தக் காத்திருக்காது கதை முடிந்து போகும் தருணத்தில் ஒரு நிமிடக் கதையை கதையின் காரண காரணத்தில் விரித்து பாலை நிலம் போல் சமவெளியாக்கி நீர் வற்றித் தவிக்கும் சமயம் ஆங்காங்குச் சோலைகளை அமைத்திருக்கும் இயற்கையின் பாங்கின் நம்பிக்கையில் புதையலைத் தேடும் யாத்ரீகனுக்கு  நிச்சயப் புதையலாய் காத்திருக்கும் இப்புதினம் என்றென்றும்....