Monday 25 August 2014

புதுக்கதை

நிலவைக் காணாத பராதியில்லை
நட்சத்திரங்களுமில்லை
எனபதால் இரவில்லை 
எனறாகி விடுமோ 
இருள் சூழ 
நிசப்தம் சில் வண்டுகளின்
ரீங்காரத்தை காதில் சேர்க்க
வீட்டின் வௌி முற்றத்தில்
கொதுவின் கடியில்
லா ச ரா வின் பிடியில் நான்
பக்கங்கள் புரள எழுத்துக்கள்
விழிகளின் வழியே மனதைத் தொட
வார்த்தைகளின் ஜாலம் நிகழ்வுகளை கோர்க்க
நிகழ்வுகள் சம்பவங்களின்
தொகுப்பாய் விரிய 

இத் தொகுப்புகள் குறுங்கதையாய் மனதில் குடியேற 
வார்த்தைப் பிரயோகங்கள் 
அந்நியத்தை உணர்த்த வாசிப்பில் சலிப்பைக்
கொள்ளாமல் சம்பவங்களை இணைத்து கதையாக்கி
கொண்டிருக்கிறேன் கதை முடிவுறும் நேரம் 

புத்ர எனும் புதினம்
புதுக்கதையாய் என் மனதின்
சேமிப்பில்

என்ன தெரியும்

என்னைப் பற்றி என்ன தெரியும்?
எல்லாம் தெரியும்
எல்லாம் தெரியுமென்றால்?
நீ ஓரு கோபக்காரன்
நானா எப்படி சொல்லுகிறாய்?
எப்போதும் சண்டை போடுவதால்
ஆமாம் நீ செய்வது சரி இல்லை
என்ன சரி இல்லை?
பழசை எப்போதும் நினைத்துக் கொண்டிருக்கிறாய்
ஏன் பழசை நினைக்கக் கூடாது?
அதில் சுவாரஸ்யம் இல்லை சோகம்
மற்றும் வலிகள் நிறைந்தது
அதனாலென்ன அந்த அனுபவம் தேவைதானே?
இருக்கலாம் இருந்தும் அவை கசப்பாய் தெரிகிறது
கசப்பு தேவை இல்லையோ?
யாருக்கு வேணும்
உனக்கு மட்டுமானது தான்
அதுவே உன் வாழ்ககைக்கு
ஆதாரம்
இறுதியாய் என்ன சொல்ல வருகிறாய்?
பழயதை மறக்காதே
சரி ஒத்துக்கொள்கிறேன் இன்று
இரவு என்ன செய்ய போகிறாய்?
உண்ண வருகிறேன்
உறங்கும் வரை உன்னுடன் இருக்கிறேன்
பிறகு?
உன் உள்ளுணர்வுடன் உன் மனம் போன போக்கில்

நீலச் சட்டை

அதிகாலை பொழுது
வெடிகளின் சப்தம்
விண்ணை முட்ட
எழ மறுக்கிறான்
சிறு பிராயத்திற்கு
தெரியவில்லை
வறுமையின் உச்சம்
பொழுது அவனுக்காக
காத்திருக்கவிலலை
இந்த சிறுவனும்
பிடிவாதத்தை 

தளர்த்தவில்லை 
வித்த தாயின்
மனதோ தைத்தது ஒட்டுத்
துணியில் புதிய உடுப்பு
பார்த்த சிறுவனுக்கோ
பரவசத்தின் எல்லை
வேகமாக குளித்து
தைத்த ஆடையை
அணிந்து வீதியில்
விளையாட பறக்கிறான்
வீதியில் பார்த்தவன்
சுமை தூக்கப் போகிறாயா
என்று பரிகசிக்க
அந்த சிறுவனுக்குத்
தெரியாது நீலச்சட்டை
மூட்டை தூக்குபவனின்
அடையாளமென்று...

வெளிச்சம் குறைகிறது

வௌிச்சம் குறைகிறது
நிழல் கரைகிறது
தனித்து விடப்பட்ட
பாதையின் தூரம்
தௌிவில்லை
நாய்களின் ஊளை
நரிகளை காட்ட
குறுக்கே பூனை
பாய்கிறது நட்சத்திரங்கள்
துணை சொல்ல
நிலவின் வௌிச்சம்
சூன்யத்தில் தூரத்தில்
ஓர் உருவம் மரத்தை
அசைந்து கொண்டிருக்க
கால்கள் முன்னோக்கி
நடக்க மறுக்க முதுகை
ஒருவன் உந்தி தள்ள
எதிர்க்க முடியாமல்
ஒவ்வொரு அடியாய்
தலை அனிச்சையாய்
சுடுகாட்டில் எரியும்
பிணம் அதிலொருவன்
மேலெழ பாதி வெந்த
நிலையில் அசைக்கும்
தள்ளும் உருவங்களுடன்
கூட்டணி உதயமாக
இதயத்தின் துடிப்பு என்
காதுகளில் திடீரென்று
வெடித்த சப்தம்
எழுந்து பார்க்கிறேன்
வானம் நிசப்தமாய்
மரம் காற்றில் அசைய
கோவிலின் பண்டிகை
நடு இரவில் களை
கட்டுகிறது .......

வேண்டுதல்கள்

கடவுளே

என் நாளை இனிய நாளாக அமைத்துக் கொடு

என் வேலையை சுலபமாக்கி கொடு

என் குடும்பத்தை செல்வ செழிப்போடு காப்பாற்று

என் வியாபாரத்தை பெருக்கு

நல்ல ஏமாளியை காட்டு

எனக்கு நல்ல படிப்பு சக்தியை கொடு

இன்றைய தேர்வில் வெற்றி பெற ஞாபக சக்தியை கொடு

ஒன்றுமே படிக்கவில்லை இருந்தும் தேர்ச்சி செய்ய வை

இன்று திருட நல்ல வீட்டைக் காட்டு

கொலை செய்து விட்டேன் போலீசிலிருந்து காப்பாற்று

என்னை அழகாக வை

என் முதலாளி என்னை திட்டாமல் இருக்க வை

அழகான பெண்ணைக் காட்டு காதலிக்க

மழையை கொடு

என் குழந்தையைக் காப்பாற்று

இன்று குடிப்பதற்கு வாங்கி கொடுக்க நல்ல நண்பனை காட்டு

கடன் கேட்காமல் இருக்க வை

என் பேப்பரை திருத்தும் வாத்திக்கு பாஸாக வைக்கும் மனதை கொடு

நல்ல வீடு வாங்க வேண்டும்

இது போன்ற வீடுகள் நிறைய வாங்க வேண்டும்

வாடகை கொடுப்பவர்களை ஒழங்காக கொடுக்க வை

வட்டிக்கு பணம் கொடுக்க நல்ல ஆளை காட்டு

கொடுத்த பணத்தை வசுலாக்கி கொடு

மனநிம்மதியை கொடு

சந்தோசத்தை மட்டும் கொடு

நோயிலிருந்து காப்பாற்று

ஒரு வேளை உணவுக்கு வழி செய் ஆண்டவா

நல்ல வேலைக்கு வழி கொடு

அழகான ஆண்குழந்தையை கொடு

பெண் குழந்தை வேண்டாம்

இந்த பெண்ணை கரை சேர்க்க வழி காட்டு

என் மகனுக்கு நல்ல புத்தியை கொடு

நல்ல நண்பர்களை காட்டு

எடுத்த காரியத்தில் வெற்றி கொடு

நினைத்தக் காரியம் நிறைவேற்று

விபத்திலிருந்து காப்பாற்று

இன்னும்

இன்னும்

இன்னும்

முறையீடுகள் எதற்காக ?

எல்லாம் நிறைவேறி விடுகிறதா ?

குறிப்பு வேண்டுதல்களில் இட ஒதுக்கீடு கிடையாது.....

கதை சொல்லப் போகிறேன்

மாயவலை...

எனை மறந்தேன்
மாயவலையில் விழுந்தேன்
வலி உணர்ந்தேன்
விடுபட விழைந்தேன்
வழியறியாமல் தவித்தேன்
சிரமம் அறிந்தேன்
சிந்தித்தேன்
சிந்திக்கிறேன்
சிந்திப்பேன்
விடுபடுவேனா என்று...





மறந்துப்போன...

மறந்து போன விசயங்கள் என்று 
ஒன்றில்லை அது நம் மூளையின்
மூலையில் உறங்கிக் கிடக்கிறது
குப்பையாய்- நிலை மாறும் 
தருணங்களில் நீண்டு எழும்
நினைவுகளின் அலையில்
தூசு தட்டப்பட்டு நம்மை
ஊசிப்போலக் குத்தும் நாம் 
மறந்துப் போன விசயங்கள்..



கவிதை இல்லை...

இதயம் பலஹீனமானவர்கள்
இந்த கவிதையை படிக்க
வேண்டாம் காரணம் இந்த
கவிதையில் இரக்கமில்லை

சமூகப் போராளிகள் இந்த
கவிதையை படிக்க வேண்டாம்
காரணம் இந்த கவிதையில்
போரட்டமில்லை

கவிதை படைப்பவர்கள் இந்த
கவிதையை படிக்க வேண்டாம்
காரணம் இதில் கவிதையே இல்லை




இறந்துவிட்டது...

மிகவும் மெதுவாக
உணவை உண்டு
கொண்டிருக்கிறேன்
காரணம் ருசியை
என் நாக்கு உணர்ந்து
கொண்டிருக்கிறது
இருந்தும் எனது
உணவு முடிந்து விட்டது
அதனுடன் எனது
ருசியும் இறந்துவிட்டது




புரிந்து கொண்டேன்...

புரிந்து கொண்டேன்
இருந்தும்
புரியாமல் தவிக்கிறேன்

புரிந்து கொண்டேன்
புரியாததையும்
தவிப்பதையும்

புரிந்து கொண்டேன்
புரியாமல் தவிப்பதை
தவிர்ப்பதற்காக

புரிந்து கொண்டேன்
இதை
படிக்கும் போது
நீங்கள் தவிப்பதை

புரிந்து கொண்டேன்
நீங்கள் தவிக்காமல்
தவிர்க்க

தவிர்க்க நீங்கள்
புரிந்து கொண்டால்
புரிந்து கொண்டதை
புரிய வைக்கவும்...




இளமைக்கால தழும்புகள்...

பருவத்திற்கு பூக்கும் மரம் போல 
மனதில் கசப்பு பூக்களாய் பூக்கும்
எனது இளமைக்கால நினைவுகள்
அமைகின்ற வாழ்வில்
அடியோடு மாற்றினாலும்
தழும்பாகி போன ரணங்கள்
நிசப்தமில்லா இரவினில் 
உறங்கும் உள்ளத்திலிருந்து
வௌிப்பட்டு கழுத்தை
நெறிக்கும் பிசாசாய்
எதற்காயும் விசனம் காட்டா
இயற்கையை போல் இருந்து விட
எத்தனித்தாலும் தனித்தே
விடப்பட்டசமயத்தில்
மழைக்கு சிணுங்கும்
தேரையை விழுங்கத் துடிக்கும்
பாம்பை போல் மெல்ல
மெல்ல ஊர்ந்து சமயம்
நோக்கி செலுத்தப்படும்
விசம் போல என்
இளமைக்கால தழும்புகள்....




கதை சொல்லப் போகிறேன்...]

கதை சொல்லப்
போகிறேன்
இந்தக் கதையில் 
கதையில்லை
கவர்ச்சயில்லை
கதாபாத்திரங்களில்லை 
நகைச்சுவை 
ஆடல் பாடல் இல்லை
சமூக சீரழிவு பற்றி இல்லை
சண்டை இல்லை
இல்லாத இத்தனையும்
ஒரு கதையாக சொல்லி
கதை முடிக்க
ஒரு கதையாசிரியரை
தேடிக் கொண்டிருக்கிறது
இந்த கதை....




மீந்த உணவு...

குப்பையில் மீந்த உணவு
நக்கித் தின்னும் நாய்
நாயை விரட்டி பசி
போக்கும் சிறுவன்
தேநீர் கடை வாசலில்
தேர்தல் அறிக்கை
நாடு வல்லரசாக்கப்படும்...



கனவின் கொடூரங்கள்...

பல கொலைகளுக்கு 
சாட்சியாகவும் 
பயங்கரமான காட்டு
மிருகங்களுடனான
சண்டைகளும்
பாம்பின் துரத்தல்களும்
துடுப்பில்லா
படகில் நடுக்கடலில்
தத்தளிக்கும் தவிப்பிலும்
முற்றுப்பெறப் போவதில்லை
கனவின் கொடூரங்கள்...




நினைவுப்பாதை...

உனக்கும் எனக்கும்
ஆன உறவு இன்றோடு
முடிவதில்லை
முயற்சிக்காதே
நீயாக முடித்துக்
கொள்ள நடந்தவைகள்
நினைவின் களமாக
நிஜத்தின் நெடும்
பாதையில்
நெருடலற்ற
பயணத்தில்
நீயென்று
நீயும்
நானென்று
நானும்
நாம் என்ற
கனவோடு
நினைவுகளில் இல்லா
நினைவுப் பாதையில்....




விண்ணோடு உரையாடல்...

இரவாகிவிட்டது 
இருந்தும்
நிலவை காணவில்லை
மனதில் குடிபுகுந்த
தனிமையோடு
லயமில்லாச் சிந்தனை
கொள்ள அந்நேரக்
காற்றோ அசுரத்
தனமாய் பெய்யத்
துடிக்கும் மழையை
தடுக்க ஏன் என்ற
கேள்வியோடு
விண்மீன் தெரியா
விண்ணோடு
என் உரையாடலை
தொடர்கிறேன்...




கவிதைகள் தொடரும்,


குட்டிக் குட்டி கவிதைகள்



இறக்கவில்லை 
பிணமாய் 
மதுக்கடை வாசலில்
மனிதன்
.
.
.
.
தன்னையும்
தன் சைக்கிளையும்
சுமந்து செல்கிறார்
தபால்காரர்
.
.
.
.

அலையே
உனைப் பார்க்க
நாங்கள் இருக்கப்
போவதில்லை நீ 
கரை தாண்டினால்
.
.
.
.
நவீன வலையில்
மனித சமூகம்
சிலந்தி யாரோ
.
.
.
.
ஆழ்ந்த நித்திரையில்
நீளும் கனவில்
அன்பும் எதிர்ப்பும்
இறந்தவர் எழுவதும்
இருப்பவர் இறப்பதுமாய்
.
.
.
.
நீர் வற்றிய
குளத்தில்
நீந்த மறக்கிறது
மீனின் குஞ்சுகள்
.
.
.
.
இத்தனை கால்களிருந்தும்
இந்த சாலையை வேகமாக
கடக்க முடியாமல் நசுங்கி
உயிர் பிரிந்த கதையை
எப்படி உன்னிடம் சொல்ல..
.
.
.
.
எனக்கும்
எனக்குள்ளும்
சண்டையில்லை
இருந்தும் பேச
மறுக்கிறோம்
ஆம் மறக்கிறோம்
பேச...
.
.
.
.
அசைந்தாடும் அவள்
விழிகளில் அலை போல்
ஆயிரம் எண்ணங்கள்
என்ன நினைப்பாளோ 
எனும் போரட்டத்தில்
அவளெதிரே நானும்..
.
.
.
.
அவள் அழகாக இருக்கிறாள்
என்னை பார்க்கவில்லை
இசை அவளது காதினுள்
சில நேர புன்முறுவல்கள்
ரசிப்பதில் தெரிகிறது
அறிமுகமில்லையே எனக்கு
நான் இயற்கை ரசிப்பது 
போலிருக்க என் மனம் ??
.
.
.
.
என் முன் உணவு
பசியைப் பற்றி 
யோசிக்கிறேன்
சுயநலமாய்..
.
.
.
.
பிணக்குவியல்களின் நடுவில்
கண்ணில் நீர் வற்றிய குழந்தை
மரணத்தை வழிநோக்கி...
.
.
.
.
கிரகணம் பீடித்த நிலவு போல்
இவ்வுலகும் மெல்ல இருளில்
யார் இங்கே கடைசியாய்..
.
.
.
.
அந்த காக்கை ஏன்
கரைகிறது
வீட்டில் 
உணவில்லை 
என்பது தெரியுமா
அதற்கு...
,
.
.
.
இருளின் வாசத்தில்
பாலை நிலத்தில்
நடக்க தொடங்கினேன்
நானும் எனது
நானும்...
.
.
.
.
கனவில் 
குடித்த
காபியில்
தொலைந்தது
எனது
தூக்கம்..
.
.
.
.
.
நாட்பட்ட ரணமும்
நாட்பட்ட காதலும்
மரத்து போகுமே
நாட்களும் இறந்துக் 
கொண்டிருக்க...
.
.
.
.
ரகசியம் 
என்பது 
அதனுள் 
இருக்கும் 
ரகசியம் தான்..
,
.
.
.
நீ நீயாக இல்லை என்பதற்கு உன்
கல்லறை மட்டுமே சாட்சியம் சொல்லும்...
.
.
.
.
இறந்தவரை சுற்றி
அழுகுரல் சப்தங்கள்
இடை இடையே 
வித விதமான
கைபேசி் அழைப்பு
ஒலிகளுடன்...
.
.
.
.
பிணவறையில்
உறங்கா 
பிணங்களின்
ஆதங்கம்
சகிக்க முடியாத
துர்நாற்றம்..
.
.
.
.
உன்னிடம் 
மட்டுமே
சொல்லுகிறேன்
ரகசியம்..
.
.
.
.
.
எழுத நினைக்கும்
வார்த்தைகள்
என் மனதில் இல்லை
அதனால் 
எழுதவில்லை

‪#‎ஞாபகமும்‬ மறதியும்
.
.
.
.
.
வெற்றிடத்தில் 
இருந்தால் 
இறந்துவிடுவேன்
.
.
.
.
என் வினை
தன் வினை
பிறர் வினை
எல்லாம்
செய் வினை 
எனக் கொள்க
.
.
.
.
தெளிவில்லாமை 
துன்பத்தில் 
சிரிக்க மட்டுமே
.
.
.
.
வயிற்றில் 
இடமில்லை
இருந்தும்
பசித்திருக்கிறான்
மிருகமாய்
.
.
.
.
காதல்
துன்பம் 
ஏமாற்றம் 
எதிர்பார்ப்பு 
இழப்பு 
இவையே
நவீன கவிதை
.
.
.
.
விண்மீன்கள்
உறங்குவதில்லை .
.
.
.
.
உறக்கம் வரவில்லை
உறங்க முயற்சிக்கிறேன்
காரணம் 
இரவாகி விட்டது...
.
.
.
.
எல்லா மீன்களும் 
நீந்துகிறது
வலை காத்துக்
கொண்டிருக்கிறது...
.
.
.
.
கருமேகத்தில்
நீர்த்து விடும்
முழு நிலவும்..
.
.
.
.
காகிதக் கப்பலும்
சுமந்து செல்லும்
குழந்தைகளின்
கனவுகள்....
.
.
.
.
எனக்கு வேர்க்க வில்லை
இருந்தும் நான் குளிரும்
பிணவறையில்...
.
.
.
.
எனக்கும் ஒரு காதலி இருக்கிறாள்
நேரில் அவளைப் பார்த்ததில்லை
இருந்தும் நான் காதலிக்கிறேன்
காரணம் அவளும் என்னை
காதலிப்பதால்...
.
.
.
.
அரிது
அறிது
அறிவு..
.
.
.
.
கருகும் 
நுனியில்
விளக்கின் 
ஒளி..
.
.
.
.
சத்தம் போடாதே
என் குழந்தை
உணர்ந்து விடுவாள் 
என் கனவில்...
.
.
.
.
மிரட்டுகிறேன்
அவன் சிரிக்கிறான்
பயமில்லாத
குழந்தையாக ...
.
.
.
.
மழையில் நடந்ததால்
நனைந்து விட்டேன்
குடையில்லை என்னிடம்...
.
.
.
.
உறங்காமல் 
யோசிக்கிறேன்
உறங்குவது
எப்படி என்று...
.
.
.
.
உள் கிரகிக்க
இயலவில்லை 
வீதியெங்கும்
மழை வெள்ளம் ...
.
.
.
.
செல்வம் அழித்து
செல்வம் பெருக்க
சிறைப் பிடித்தேன் 
வாஸ்து மீனை...
.
.
.
.
.தொடரும்,