இரவினில் வீதியின்
வழியே நடக்கிறேன்
அவசரம் எல்லோருக்கும்
நடைபாதையில்
பூக்களும் காய்களும் குறைந்து
விற்பனைக்கான நேரம்
முடியபோகிறது என்பதைக்
காட்டுகிறது சமூகத்தால்
பிச்சைக்காரனாக அறிமுகம்
செய்யப்பட்டவன் உறங்கத்
தொடங்கி விட்டான்
குழாயடியில் நீர் விரையமாக
அதன் வழியே சென்ற நாய்
கீழுள்ள நீரை நக்கி குடிக்கிறது
தண்ணீர் பஞ்சம் தீர்ந்து விட்ட நிலை
மனித வாசம் குழாயடியில் இல்லை
என் கால்கள் தடுக்கி
கீழே விழப்போகிறேன் தெரு
விளக்கு எரியவில்லை
பள்ளம் தெரியவில்லை
என் மனம் சந்தேகிக்கிறது
நேற்றுப் போடப்பட்ட
புதிய சாலையில் பள்ளமா
சாலை போட்டவன்
கழிவு நீருக்கான குழாயை
பதிக்க மறந்துவிட்டான் போலும்
கண்ணுக்கு புலப்படும் வெளிச்சம்
குறைவாக இருக்கிறது இருந்தும்
பார்த்து மெல்ல நடக்கிறேன்
என்ன ஆச்சர்யம் இத்தனை
மக்கள் வரிசையாக நிற்கிறார்கள்
ஒருவர் பின் ஒருவராக
தொடர வரிசை முடிகிறது
மதுக்கடை வாசலில்
நாளை முதல் மூன்று நாள்
விடுமுறையாம் சேமிப்பில்
தெளிந்தவர்கள் நம் மக்கள்
என வியந்து கடக்கிறேன்
அவர்களை விட்டு
இதோ புகழ் பெற்ற
நகைக்கடை எத்தனை மக்கள்
உள்ளே விலை குறைந்து விட்டதா
கேள்வியோடு கடக்கிறேன்
என்னை ஒருவன் கடக்கிறான்
அவனுடைய இரு சக்கர வாகனத்தில்
மனைவி மக்களுமாய் ஐந்துபேர்
வண்டி ஓட்டுபவன் மகா கில்லாடி
பள்ளம் நிறைந்த சாலையிலும்
அழகாக வண்டி ஓட்டுகிறான்
என் ஊருக்கான கடைசி வண்டி
நடுவழியில் நிற்கிறது
சக்கரம் ஒன்றைக் காணவில்லை
அரசு போலத்தான்
அரசுப் பேருந்துகளும்
மூகமூடி பெண்ணொருத்தி
என்னைத் தாண்டி வேகமாக
போகிறாள் சாலையில் எழும்
புழுதி படாமலிருக்க போலும்
குடிசை நிறைந்த பகுதியைக்
கடக்கிறேன் ஏன் இவர்கள்
ஊருக்கு ஒதுக்குப் புறமாக
என்ற கேள்வியுடன் கடக்க
அந்த வீதியில் சிறுவர்கள்
கூட்டமாக விளையாடி
கொண்டிருக்கிறார்கள்
ஆடையில்லாத ஒரு குழந்தை
எனைப் பார்க்கிறது
ஏன் இவ்வளவு சோகம்
இந்த குழந்தைக்கு
பதில் தெரியவில்லை
கடக்கிறேன் அந்த குழந்தையை
ஒலிபெருக்கி சத்தம்
காதைப் பிளக்கிறது
அரசியல் பேச்சு
அவர்கள் செய்த சாகசங்கள்
கேட்கவே பிரமிப்பாய் தோன்ற
கூட்டத்தைப் பார்க்கிறேன்
அவர்களோடு சேர்த்து மொத்தம்
பத்து பேர் கூட இல்லை
எதற்காக இந்த கூட்டம்
பேச்சை நிறுத்த
அவன் தயாரில்லை போலும்
கடக்கிறேன் அவர்களை விட்டு
என்ன இது எப்படி வந்தது
இந்த வெள்ளம்
ஆர்பரித்து ஓடுகிறதே
முகம் சுழிக்க வைக்கிறது
நதிமூலத்தையும் அருகில்
கண்ட போது
கழிவுநீர்க் கால்வாயில்
ஏற்பட்ட அடைப்பு போலும்
எல்லா மக்களும் அதைக்
கடக்கிறார்கள் தயங்கிய
கால்கள் முன்னே செல்கிறது
தாண்டி கடக்கிறேன் அந்த
உணவு விடுதியின் வாசம்
மூக்கை துளைக்கிறது
என் வீடு வந்ததை
உணர்த்துகிறது அந்த வாசம்
என் பிள்ளைகள் ஓடி
வருகிறார்கள் அவளுக்கான
வண்ணப் பென்சிலும் புத்தகமும்
சிறியவள் அழத்தொடங்குகிறாள்
வாங்கி வந்த மிட்டாயில் இலவச
இணைப்பை வாங்க மறந்து விட்டேன்
சமாதானம் சொல்ல முடியாமல்
கால்களைக் கழுவி வீட்டினுள்
செல்ல என் மனைவியைத்
தேடுகிறேன் எப்பவும் போல
அவள் இல்லை அம்மாவின்
குரல் மளிகைக் கடையில்
காசு கொடுத்தாயிற்றா என்று
ம் என்ற முனகலுடன் எனது
அறைக்குள் நுழைகிறேன்
என்னவள் சிரித்துக் கொண்டு
இருக்கிறாள் புகைப்படத்தில்.........
வழியே நடக்கிறேன்
அவசரம் எல்லோருக்கும்
நடைபாதையில்
பூக்களும் காய்களும் குறைந்து
விற்பனைக்கான நேரம்
முடியபோகிறது என்பதைக்
காட்டுகிறது சமூகத்தால்
பிச்சைக்காரனாக அறிமுகம்
செய்யப்பட்டவன் உறங்கத்
தொடங்கி விட்டான்
குழாயடியில் நீர் விரையமாக
அதன் வழியே சென்ற நாய்
கீழுள்ள நீரை நக்கி குடிக்கிறது
தண்ணீர் பஞ்சம் தீர்ந்து விட்ட நிலை
மனித வாசம் குழாயடியில் இல்லை
என் கால்கள் தடுக்கி
கீழே விழப்போகிறேன் தெரு
விளக்கு எரியவில்லை
பள்ளம் தெரியவில்லை
என் மனம் சந்தேகிக்கிறது
நேற்றுப் போடப்பட்ட
புதிய சாலையில் பள்ளமா
சாலை போட்டவன்
கழிவு நீருக்கான குழாயை
பதிக்க மறந்துவிட்டான் போலும்
கண்ணுக்கு புலப்படும் வெளிச்சம்
குறைவாக இருக்கிறது இருந்தும்
பார்த்து மெல்ல நடக்கிறேன்
என்ன ஆச்சர்யம் இத்தனை
மக்கள் வரிசையாக நிற்கிறார்கள்
ஒருவர் பின் ஒருவராக
தொடர வரிசை முடிகிறது
மதுக்கடை வாசலில்
நாளை முதல் மூன்று நாள்
விடுமுறையாம் சேமிப்பில்
தெளிந்தவர்கள் நம் மக்கள்
என வியந்து கடக்கிறேன்
அவர்களை விட்டு
இதோ புகழ் பெற்ற
நகைக்கடை எத்தனை மக்கள்
உள்ளே விலை குறைந்து விட்டதா
கேள்வியோடு கடக்கிறேன்
என்னை ஒருவன் கடக்கிறான்
அவனுடைய இரு சக்கர வாகனத்தில்
மனைவி மக்களுமாய் ஐந்துபேர்
வண்டி ஓட்டுபவன் மகா கில்லாடி
பள்ளம் நிறைந்த சாலையிலும்
அழகாக வண்டி ஓட்டுகிறான்
என் ஊருக்கான கடைசி வண்டி
நடுவழியில் நிற்கிறது
சக்கரம் ஒன்றைக் காணவில்லை
அரசு போலத்தான்
அரசுப் பேருந்துகளும்
மூகமூடி பெண்ணொருத்தி
என்னைத் தாண்டி வேகமாக
போகிறாள் சாலையில் எழும்
புழுதி படாமலிருக்க போலும்
குடிசை நிறைந்த பகுதியைக்
கடக்கிறேன் ஏன் இவர்கள்
ஊருக்கு ஒதுக்குப் புறமாக
என்ற கேள்வியுடன் கடக்க
அந்த வீதியில் சிறுவர்கள்
கூட்டமாக விளையாடி
கொண்டிருக்கிறார்கள்
ஆடையில்லாத ஒரு குழந்தை
எனைப் பார்க்கிறது
ஏன் இவ்வளவு சோகம்
இந்த குழந்தைக்கு
பதில் தெரியவில்லை
கடக்கிறேன் அந்த குழந்தையை
ஒலிபெருக்கி சத்தம்
காதைப் பிளக்கிறது
அரசியல் பேச்சு
அவர்கள் செய்த சாகசங்கள்
கேட்கவே பிரமிப்பாய் தோன்ற
கூட்டத்தைப் பார்க்கிறேன்
அவர்களோடு சேர்த்து மொத்தம்
பத்து பேர் கூட இல்லை
எதற்காக இந்த கூட்டம்
பேச்சை நிறுத்த
அவன் தயாரில்லை போலும்
கடக்கிறேன் அவர்களை விட்டு
என்ன இது எப்படி வந்தது
இந்த வெள்ளம்
ஆர்பரித்து ஓடுகிறதே
முகம் சுழிக்க வைக்கிறது
நதிமூலத்தையும் அருகில்
கண்ட போது
கழிவுநீர்க் கால்வாயில்
ஏற்பட்ட அடைப்பு போலும்
எல்லா மக்களும் அதைக்
கடக்கிறார்கள் தயங்கிய
கால்கள் முன்னே செல்கிறது
தாண்டி கடக்கிறேன் அந்த
உணவு விடுதியின் வாசம்
மூக்கை துளைக்கிறது
என் வீடு வந்ததை
உணர்த்துகிறது அந்த வாசம்
என் பிள்ளைகள் ஓடி
வருகிறார்கள் அவளுக்கான
வண்ணப் பென்சிலும் புத்தகமும்
சிறியவள் அழத்தொடங்குகிறாள்
வாங்கி வந்த மிட்டாயில் இலவச
இணைப்பை வாங்க மறந்து விட்டேன்
சமாதானம் சொல்ல முடியாமல்
கால்களைக் கழுவி வீட்டினுள்
செல்ல என் மனைவியைத்
தேடுகிறேன் எப்பவும் போல
அவள் இல்லை அம்மாவின்
குரல் மளிகைக் கடையில்
காசு கொடுத்தாயிற்றா என்று
ம் என்ற முனகலுடன் எனது
அறைக்குள் நுழைகிறேன்
என்னவள் சிரித்துக் கொண்டு
இருக்கிறாள் புகைப்படத்தில்.........
No comments:
Post a Comment